லிங்கா வசூல் கணக்கு ரஜினியிடம் ஒப்படைப்பு: விநியோகஸ்தர்களுக்கு அடுத்த வாரம் நஷ்டஈடு?

Bookmark and Share

லிங்கா வசூல் கணக்கு ரஜினியிடம் ஒப்படைப்பு: விநியோகஸ்தர்களுக்கு அடுத்த வாரம் நஷ்டஈடு?

ரஜினி இரு வேடங்களில் நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12–ந்தேதி ரிலீசானது. இப்படம் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசானது.

இப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரினர். சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

ரஜினி இப்பிரச்சினையில் தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கடிதங்கள் அனுப்பினார்கள். லிங்கா படத்துக்கு 50 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளதென்றும் ரூ.32 கோடி நஷ்ட மடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் ரஜினி தலையிட்டார். லிங்கா பட வசூல், நஷ்டம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அறிக்கை தரும்படி கோவை ஏரியா விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்தை பொறுப்பாளராக நியமித்தார். விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து திருப்பூர் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு தியேட்டரிலும் வசூல் தொகை விவரங்களை தஸ்தாவேஜுகளுடன் பெற்றுக் கொண்டார். பின்னர் அவற்றை ரஜினிக்கும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுக்கும் அனுப்பிவைத்தார்.

அதனை ரஜினி ஆய்வு செய்து வருகிறார். அடுத்த வாரம் 5 அல்லது 6–ந்தேதி முதல் கட்டமாக தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என தெரிகிறது. இரண்டாவது கட்டமாக விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு பெறுகிறார்கள்.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions