தூற்றுவார் தூற்ற... போற்றுவார் போற்ற... 50 நாளை கடந்தார் லிங்கா

Bookmark and Share

தூற்றுவார் தூற்ற... போற்றுவார் போற்ற... 50 நாளை கடந்தார் லிங்கா

சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி நடித்த லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். கடந்த டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாளான 12ந் தேதி வெளிவந்த படம் இன்று (ஜன 30) 50 வது நாளை தொட்டிருக்கிறது.

சென்னையில் தேவி, ஆல்பட், அபிராமி வளாகங்களில் ஓன்றிரண்டு காட்சிகளாக படம் தொடர்கிறது. தமிழகத்தின் மற்ற எந்த ஊரிலும், எந்த தியேட்டரிலும் 50 நாட்களை தொடவில்லை.

விநியோஸ்தர்கள் நஷ்டஈடு பிரச்னை, போராட்டம், கதைக்கு உரிமை கோரி வழக்கு. படத்தை பற்றி இணைய தளங்களில் நெட்டிசன்களின் கேலி, கிண்டல் இப்படி எல்லாவற்றையும் சந்தித்து 50வது நாளை தொட்டிருக்கிறார் லிங்கா.

இப்படி பல பிரச்னைகளை தொட்டிருப்பதாலோ என்னவோ தூற்றுவார் தூற்ற... போற்றுவார் போற்ற... என்ற கேப்சனோடு 50வது நாள் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் தங்களின் அடுத்த படம் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions