'லிங்கா' - தொடரும் 'அறிக்கைப் போர்'...

Bookmark and Share

'லிங்கா' - தொடரும் 'அறிக்கைப் போர்'...

'லிங்கா' பிரச்சனை தொடர்பாக நாளுக்கு நாள் வரும் அறிக்கைகளைப் பார்த்து ஏன்தான் இப்படி ஒரு படத்தை எடுத்து நடித்தோமோ என்று ரஜினிகாந்த்தே வருத்தப்பட்டுப் போயிருப்பார்.

படம் ஆரம்பமான நாளிலிருந்தே பிரச்சனை மேல் பிரச்சனையாக தொடர்ந்து ஷுட்டிங் நடந்து முடிந்து ஒரு வழியாக ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று படம் வெளிவந்தது.

வெளியான சில நாட்களுக்குள்ளேயே படம் மாபெரும் தோல்வி என படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களே அறிவிக்காத குறையாக எங்களுக்கு நஷ்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பித்தனர்.

தொடர்ந்து எவ்வளவு செய்தும் அந்தப் பிரச்னை இதுவரை முடியாமல் இழுவையோ.....இழுவை...என இழுத்துக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்தும் ஒரு வழியாக நஷ்டத்தில் குறிப்பிட்ட தொகையைத் தர சம்மதித்து கடந்த வாரம் அதற்கான தொகையையும் கொடுத்து விட்டார்.

ஆனால், அந்தப் பங்கைப் பிரிப்பதில் தொடர்ந்து தகராறு மேல் தகராறு நடந்து கொண்டு வருவதாக திரையுலகத்தினரே கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனை நாட்களாக இந்தப் பிரச்சனை குறித்து, இது வரை கருத்து சொல்லாதிருந்த தமிழ்நாடு, கேரளா வினியோக உரிமையை வாங்கிய  வேந்தர் மூவீஸும் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தியேட்டர்காரர்கள், மீடியேட்டர்கள், வினியோகஸ்தர்கள், படத்தைத் தயாரித்தவர்கள், தற்போது பஞ்சாயத்து பேசி வரும் சங்கத்தினர் என அனைவருமே இந்தப் பிரச்சனையை நல்ல படியாக முடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஒரு நாளுக்கு ஒரு அறிக்கை என்று வந்து கொண்டிருந்தது போய், இனி ஒரு மணி நேரத்துக்கு ஒரு அறிக்கை வருமோ என ஊடகங்களே அலற ஆரம்பித்துவிட்டன.

திரைப்படங்களில் பல பிரச்சனைகளை முடித்து வைக்கும் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் அந்த ஹீரோயிசத்தை வெளிப்படுத்தி பிரச்சனையை சீக்கிரமே முடித்து வைப்பாரா என்பதே நடுநிலை ரசிகனின் கேள்வியாக உள்ளது.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions