நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!

Bookmark and Share

நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!

ரஜினி நடித்த லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் 33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறி சில விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். அதன் பிறகு ரஜினியின் ஆலோசனையின் பேரில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பத்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க முன்வந்து.

அதனை தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டார். தற்போது பணத்தை பிரித்து கொடுப்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர் - மன்னன், வட-தென்ஆற்காடு விநியோகஸ்தர் -  கிருஷ்ணகுமார், நெல்லை விநியோகஸ்தர் -  ரூபன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

லிங்கா படத்தினை வெளியிட்ட வகையில் செங்கல்பட்டு ஏரியாவிற்கு ஏழரை கோடி ரூபாயும், ஆற்காடு ஏரியாவிற்கு 4 கோடி ரூபாயும், நெல்லை ஏரியாவிற்கு இரண்டரை கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு  ரஜினிகாந்தின் அறிவுறுத்தலுக்கு பிறகு படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், பனிரெண்டரை கோடி ரூபாயை நஷ்ட ஈடாக தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  

நஷ்டம் என்று கூறி நிவாரணம் பெற்றுத்தர சங்கங்களை அணுகிய போது யாருமே ஆதரவு தராததால் தான் அறவழியில்  போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் தற்போது ரஜினிகாந்த் பணம் தருகிறார் என்றவுடன் பங்கு போட்டுத் தருவதாகக் கூறி சங்கங்கள் மூக்கை நுழைப்பதன் மர்மம் எங்களுக்கு புரியவில்லை. இந்த படத்தை வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்திருப்பது வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மட்டுமே. அவர்களை கலந்து பேசாமல் இடையில் உள்ள சிலர் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருவது வருத்தப்பட வைக்கிறது.

அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்வதை  நிறுத்திக்கொண்டால் இந்தப் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும் என்பதை படத் தயாரிப்பாளர் புரிந்துகொள்ள வேண்டும்.  

படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்,  லிங்கா வினியோகஸ்தர்களை வைத்துக்கொண்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் பணத்தை ஏரியா வாரியாக பிரித்துக் கொடுத்தால்தான் இந்த பிரச்சனை முடிவுக்கு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு
லிங்கா வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை நாளை தள்ளிவைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions