லிங்கா நஷ்ட ஈட்டில் பங்கு கேட்கும் வேந்தர் டி.வி: நாளை இறுதி சுற்று பேச்சுவார்த்தை

Bookmark and Share

லிங்கா நஷ்ட ஈட்டில் பங்கு கேட்கும் வேந்தர் டி.வி: நாளை இறுதி சுற்று பேச்சுவார்த்தை

ரஜினி நடித்த லிங்கா படத்தை வெளியிட்டதில் தங்களுக்கு 33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விநியோகஸ்தர்களில் சிலர் போராட்டம் நடத்தினார்கள். பல தரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஜினியின் ஆலோசனையின் பேரில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒத்துக் கொண்டு அந்தப் பணத்தை தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்தார்.

தற்போது படத்தை தமிழ்நாட்டு விநியோக உரிமம் வாங்கிய வேந்தர் மூவீசும் நஷ்ட ஈட்டில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் நஷ்டஈட்டை பிரித்துக் கொடுப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. நாளை (திங்கள்) இறுதிகட்ட பேச்சு வார்த்தையில் யாருக்கு எவ்வளவு பணம் என்பது முடிவு செய்யப்பட இருக்கிறது.

இதுகுறித்து லிங்கா பட விநியோகஸ்தர் சிங்காரவடிவேலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்கள் பிரச்சினைக்கு முடிவு கண்டவர்கள் கலைப்புலி எஸ்.தாணுவும், சரத்குமாரும்தான். லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நடந்து கொண்ட விதமும், எங்களை உபசரித்த விதமும் எங்கள் கண்களை குளமாக்கிவிட்டது. இவரைப்போய் கன்னடர் என்று பிரித்து பேசிவிட்டோமே என்று மனம் கூனிக்குறுகி போய்விட்டது.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசோடு சேர்ந்து தங்கள் பங்களிப்பாக சிறு தொகையாவது தந்திருக்க வேண்டிய வேந்தர் மூவீஸ் நிறுவனம் பத்து கோடி ரூபாயில் பங்கு கேட்கிறது.

பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய வேந்தர் மூவீஸ் தொலைவில் இருந்து எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றி வளரவிட்டு இப்போது நஷ்டஈட்டில் பங்கு கேட்பது முறையல்ல.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா சங்கத்தின் பொதுவான மனிதராக பேசாமல் வேந்தர் மூவீசின் பிரதிநிதியாக பேசி வருகிறார். திங்கட் கிழமை நடக்கும் கூட்டத்தில் அவர் தயாரிப்பாளர் சங்க செயலாளராக செயல்பட வேண்டும்.

வேந்தர் மூவீஸ் பிரதிநிதியாக செயல்பட நினைத்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் லிங்கா விநியோகஸ்தர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions