லிங்கா பட பிரச்சினை குறித்து சரத்குமார் பேட்டி

Bookmark and Share

லிங்கா பட பிரச்சினை குறித்து சரத்குமார் பேட்டி

நடிகர் சரத்குமார் நடித்து நாளை வெளியாக உள்ள திரைப்படம் ‘சண்டமாருதம்’. இந்த திரைப்படம் தொடர்பாக சரத்குமார், மும்பை சயான் சினிமேக்ஸ் திரையரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘சண்டமாருதம்’ திரைப்படத்தை நான் கதை எழுதி, தயாரித்து நடித்து உள்ளேன். இந்த படத்தில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். ‘சண்டமாருதம்’ என்றால் ‘பேரழிவு காற்று’ என்று அர்த்தம். படத்தின் வில்லன் கதாபாத்திரம் அதுபோன்று அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் படத்தில் என் சொந்த குரலில் காதல் பாடல் ஒன்றையும் பாடியுள்ளேன்.

திருட்டி வி.சி.டி. கலாசாரம் பெருகினால் இன்னும் 6 மாதத்தில் சினிமா உலகமே இல்லாமல் போய்விடும். எனவே அனைவரும் தியேட்டர்களுக்கு சென்று படம் பாருங்கள். இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை விரும்புபவன் நான்.

‘லிங்கா’ பட பிரச்சினையில் நானும், நடிகர் விஜயும் வினியோகஸ்தர்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறுகிறார்கள். அதை முற்றிலும் நான் மறுக்கிறேன். வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கிடைக்கவே நான் ரஜினியிடம் பேசினேன்.

அதே போல் நடிகர் விஜயும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

இவ்வாறு சரத்குமார் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions