லிங்கா பட சர்ச்சை: விநியோகஸ்தர்களுடன் சமரச பேச்சு வார்த்தை

Bookmark and Share

லிங்கா பட சர்ச்சை: விநியோகஸ்தர்களுடன் சமரச பேச்சு வார்த்தை

லிங்கா பட பிரச்சனை தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. ரஜினியின் லிங்கா, படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் எனவே ரூ. 33 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்த கட்டமாக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரஜினி ஏற்பாடு செய்தார். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள கோவை விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்தை பிரதி நிதியாகவும் நியமித்தார். அவர் விநியோகஸ்கர்களிடம் நஷ்ட ஈடு கணக்கு விவரங்களை பெற்று ரஜினியிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கு ரூ. 3 கோடி நஷ்ட ஈடு வழங்க லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் முன் வந்தார். இதனை விநியோகஸ்தர்கள் ஏற்கவில்லை. ரூ. 33 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இந்த நிலையில் விநியோகஸ்தர்களுடன் நேற்று சமரச பேச்சு வார்த்தை நடந்தது. இதில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

லிங்கா விநியோகஸ்தர்கள் சிங்கார வேலன், மன்னன், கிருஷ்ணகுமார், மணிகண்டன், பாலா, சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் விநியோகஸ்தர்கள் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக கூறப்படுகிறது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ரஜினி கூடுதல் நஷ்ட ஈடு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு தினங்கள் கழித்து மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. சமரச பேச்சு வார்த்தை நடப்பதை தொடர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை விநியோகஸ்தர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions