லிங்கா விவகாரமே விஜய்க்கு தெரியாதாம்!

Bookmark and Share

லிங்கா விவகாரமே விஜய்க்கு தெரியாதாம்!

லிங்கா படம் வெளியான மூன்றாவது நாளில் இருந்தே கலெக்சன் இல்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, ஒரு வாரத்துக்கு தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருக்கும்.

அதனால், ஒரு வாரம் கழித்து படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்த ரசிகர்கள்கூட அதன்பிறகு தியேட்டருக்கு செல்லவில்லை. ஆக, லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது என்று அதன்பிறகு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது.

கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதையடுத்து அதிர்ச்சியடைந்த சரத்குமார், தான் அப்படி யாரிடமும் சொல்லவே இல்லை என்று ஜகா வாங்கினார். ஆனால் விஜய் இதுவரை எந்த மறுப்பும் சொல்லாத நிலையில், அவரது தந்தையான எஸ்.ஏ.சியோ, லிங்கா படம் சம்பந்தமாக இப்படியொரு விசயம் நடப்பதே விஜய்க்கு தெரியாது.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரை தேவையில்லாமல் இந்த பிரச்சினைக்குள் இழுப்பது நியாயமே இல்லை என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
லிங்கா விநியோகஸ்தர்களுக்கு விஜய் கொடுத்த விருந்துக்கு எதிர்ப்பு
லிங்கா விவகாரத்தில் விஜய்யை ஏன் இழுக்கிறீர்கள்? - விநியோகஸ்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம்
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த \'ஐ\'
டிவிட்டர் டிரெண்டிங்கில் லிங்கா!
லிங்கா படத்திற்காக சீரியலுக்கு லீவ் போட்ட வெற்றிவேல் அண்ணாச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions