மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த 'ஐ'

Bookmark and Share

மலேசிய பாக்ஸ் ஆபீஸில் ரஜினியின் லிங்கா, விஜய்யின் கத்தியை தோற்கடித்த 'ஐ'

விக்ரம் நடிப்பில் மிரட்டிய ஐ படம் மலேசிய பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் கத்தி, ரஜினிகாந்தின் லிங்கா பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் அசத்தியுள்ள படம் ஐ.

ஷங்கர் படங்களுக்குரிய விஷயங்கள் ஐ படத்தில் மிஸ்ஸானாலும் விக்ரம் அதை தனது நடிப்பால் சரி செய்துள்ளார். ஏமி ஜாக்சன் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்தது.மலேசியாவில் ஐ படம் நல்ல வசூல் செய்து வருகிறது.

அங்கு வசூலில் புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.மலேசியாவில் ஐ 40 தியேட்டர்களில் ரிலீஸானது. ரிலீஸான 10 நாட்களில் படம் ரூ.5.35 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ஐ மலேசியாவில் ரஜினியின் லிங்கா(ரூ. 4 கோடி) மற்றும் விஜய்யின் கத்தி(ரூ. 3.90 கோடி) பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.ஐ மலேசியாவில் ரிலீஸான முதல் வாரத்தில் ரூ.3.74 கோடி வசூல் செய்தது.

தற்போதும் அந்த படம் ஓடும் தியேட்டர்களில் நல்ல கூட்டம் உள்ளது.ஐ படம் அமெரிக்காவில் ரூ.4.85 கோடியும், கனடாவில் ரூ.1.99 கோடியும், இங்கிலாந்தில் ரூ.3.35 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.1.62 கோடியும் வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions