புலியை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி

Bookmark and Share

புலியை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி

இளையதளபதி விஜய்யின் நடிப்பில் நேற்று வெளியான “புலி” படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த இயக்குனர் லிங்குசாமி இளையதளபதி விஜய்யையும், இயக்குனர் சிம்புதேவனையும் மற்றும் படக்குழுவினரையும், வெகுவாக பாராட்டியுள்ளார்.

இன்று காலை புலி படத்தை பொதுமக்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டு ரசித்த லிங்குசாமி உடனடியாக இயக்குனர் சிம்புதேவனையும், படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான பி.டி.செல்வகுமாரையும் போனில் தொடர்பு கொண்டு, குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியதற்காக பாராட்டியுள்ளார்.

மேலும், இளையதளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை மட்டும் திருப்திபடுத்தும் வகையிலான படங்களை தேர்வு செய்யாமல், இதுபோன்று குழந்தைகளும் பார்த்து ரசிக்கும் வகையில் தொடர்ந்து படங்களை கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே இப்படத்தை காண குழந்தைகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் குடும்பம் குடும்பமாக புலி படத்தை பார்த்து வருகின்றனர் பொதுமக்கள்.


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions