லிங்குசாமி வைத்த விருந்து!

Bookmark and Share

லிங்குசாமி வைத்த விருந்து!

தமிழ்நாடு திரைப்படஇயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக  விக்ரமன் தலைவராக இருக்கிறார். 2015-2017ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5ஆம் தேதி நடைபெற இருந்தது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியதும்,  தற்போது தலைவராக உள்ள விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணை தலைவர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுதாக்கல் செய்தனர். இணைச் செயலாளர் பதவிக்கு சுந்தர்.சி, லிங்குசாமி, பேரரசு, துணை இயக்குனர் ஏகாம்பவாணன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சமுத்திரகனி, ரமேஷ் கண்ணா, புவனா, வேல்முருகன், நம்பிராஜன், ஆர்.கண்ணன், ராஜா கார்த்திக், வேல்முருகன், ரவிமரியா, மனோஜ்குமார், திருமலை ஆகிய 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இவர்களை எதிர்த்து புதிய அலை என்ற பெயரில் சில உதவி இயக்குநர்கள் தேர்தல் களத்தில்  குதிக்க இருந்தனர். ஆனால் அவர்கள் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றதால், வேட்புமனு தாக்கல் செய்திருந்த விக்ரமன் அணியைச் சேர்ந்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று மதியம் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில்  பிரம்மாண்டமான விரந்து நடைபெற்றது. இணைச் செயலாளராக உள்ள லிங்குசாமி சார்பில் நடைபெற்ற இந்த விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்துக்காக சில லட்சங்களை ஒதுக்கி செலவு செய்துள்ளார் லிங்குசாமி.


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions