என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் இது! -இயக்குனர் லிங்குசாமி

Bookmark and Share

என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் இது! -இயக்குனர் லிங்குசாமி

ஆனந்தம் என்ற தனது முதல் படத்திலேயே மம்முட்டியை நடிக்க வைத்தவர் லிங்குசாமி. அதையடுத்து அஜீத், சூர்யா, மாதவன், ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கினார்.

அதில் ரன், சண்டக்கோழி, பையா போன்ற படங்கள் மெகா ஹிட்டானவை. இந்த நிலையில், கமலிடம் அவர் கால்சீட் வாங்கியிருக்கிறார் என்பது தெரிந்ததும் கமலைதான்  லிங்குசாமி இயக்கப்போகிறார் என்று உத்தமவில்லன் படம் உருவாவதற்கு முன்பு செய்தி பரவியது.

ஆனால் பின்னர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில்தான் கமல் நடிக்கிறார் என்று அந்த செய்தியை தெளிவுபடுத்தினார்.

இதுபற்றி லிங்குசாமி கூறுகையில்,

கமல் சார் திருப்பதி பிரதர்ஸ் படத்தில் நடிக்கிற செய்தி வெளியானதும் பலரும் என் இயக்கத்தில் அவர் நடிப்பதாக கருதி என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.

அப்போதுதான் அந்த படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக கேட்டவர்களிடம் கூறினேன். மேலும், கமல் சாரை இயக்கும் பாக்கியம் கிடைத்தால் ரொம்ப பெருமையான விசயம்.

ஆனால், என்னைக்கேட்டால், அவர் எனது பேனரில் நடித்ததே எனக்கு பெருமைதான். அதனால் அவர் என் இயக்கத்தில் நடிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமில்லை. இதையே சினிமாவில் நான் பெரிய அளவில் சாதித்து விட்டதாக உணர்கிறேன் என்கிறார்.

அதோடு, கமல் சாரை வைத்து படம் பண்ணுவதால் என் வாழ்க்கையில் இதுதான் முக்கியமான தருணம். இனிமேல் இப்படியொரு தருணம் வராது என்று சொல்லும் லிங்குசாமி, நானும் பரமக்குடிக்காரன்தான். பரமக்குடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள லட்சுமிபுரம்தான் எனது சொந்த ஊர் என்கிறார்.


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions