ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை வெளியிடும் திருப்பதி பிரதர்ஸ்

Bookmark and Share

ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை வெளியிடும் திருப்பதி பிரதர்ஸ்

இந்திய திரைப்படத்துறையில் இருக்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களான கமல்ஹாசனின் உத்தமவில்லன் மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை வெளியிட உள்ளன.

இதில் உத்தமவில்லன் படத்தில் கமல்ஹாசனுடன் பூஜா, ஆண்ட்ரியா நடித்து கமல்ஹாசன் கதை எழுதி ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முன்னோட்டம் கடந்த பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி முருகன் படமும் சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கயுள்ள காமெடி படம் ஆகும். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து படத்தை வெளியிடுவது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions