கவிதையை வைத்து பிழைத்துக் கொள்வேன்: லிங்குசாமி பேட்டி

Bookmark and Share

கவிதையை வைத்து பிழைத்துக் கொள்வேன்: லிங்குசாமி பேட்டி

தமிழ்த்திரைப்பட இயக்குனர் லிங்குசாமி ‘லிங்கூ 2’ என்ற பெயரில் ‘செல்பி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதை நூலை எழுதி உள்ளார். இதை கவிஞர் அப்துல் ரகுமான் வெளியிட இயக்குனர்கள் கவுதம்மேனனும் பார்த்திபனும் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் லிங்குசாமி “நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்குள் ஆதியில் தோன்றியது கவிதை. பிறகுதான் கதை எல்லாம் வந்தது.

ஊரிலிருந்து சென்னை வந்த போது ரெண்டு மூணு கவிதைகளுடனும் கொஞ்சம் நம்பிக்கையுடன்தான் இங்கு வந்தேன். கையில் காசு பணம் வேண்டாம். கவிதை போதும் பிழைத்துக்கொள்ளலாம் என்றிருப்பேன். அப்போதே அப்படி இருந்தேன். இப்போது இவ்வளவு பேர் கிடைத்திருக்கிறீர்கள். எனக்கென்ன கவலை?

எவ்வளவு சோதனை வந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால் அதெல்லாம் உண்மையிலேயே பெரிதாகத் தெரியாது.

இப்போது கூட வருகிற 6 மிஸ்டுகாலில் 3 கால் பணம் திருப்பித்தரக் கேட்கும் பைனான்சியராகக்கூட இருக்கலாம். கடன் இருக்கிறது கவலை இல்லை. காரணம் நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன். நான் உதவி இயக்குனராக சிரமப்பட்ட காலத்தில் கூட எல்லாக்கடையிலும் கடன் இருக்கும். 4 மாதம் கழித்து ஊர் போய்விட்டு வந்து எல்லாருக்கும் திருப்பிக் கொடுப்பேன். எங்கள் குடும்பம் ஊருவிட்டு வேறு ஊர் வந்த போது கூட ஆயிரம் ரூபாய் கடன் கொடுப்பதற்காக மாட்டை விற்றுக் கொடுத்துவிட்டு வந்தவர் எங்கள் அப்பா. அந்த நேர்மை என் ரத்தத்திலேயே இருக்கிறது. எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். எல்லா கஷ்டங்களும் கடந்து போய்விடும்”என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்த கொண்டனர்.


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions