லிங்குசாமி படத்தில் அக்சராஹாசன்!

Bookmark and Share

லிங்குசாமி படத்தில் அக்சராஹாசன்!

டைரக்டர் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்தில் நடித்தவர் விஷால். அவருடன் ராஜ்கிரண், மீராஜாஸ்மின் உள்பட பலர் நடித்த அப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படமும் சூப்பர் ஹிட்டானது.

அதையடுத்து சண்டக்கோழி படத்தின் 2ம் பாகத்திலும் விஷால் நடிக்கயிருப்பதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், பீமா, பையா, வேட்டை, அஞ்சான் படங்களுக்குப்பிறகு இப்போதுதான் அந்த படத்தை லிங்குசாமி இயக்குவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதோடு, அஞ்சான் கொடுத்த அதிர்ச்சி தோல்வியில் இருந்து இந்த படம் மூலம் மீண்டு வந்துவிட வேண்டும் என்று களமிறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி.

மேலும், அப்படத்தில் சமந்தா போன்ற பிரபல நடிகை ஒருவர்தான் நடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கமலின் இளைய மகள் அக்சராஹாசனை நடிக்க வைக்க லிங்குசாமி பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

உத்தமவில்லன் படத்திற்கு பிறகு கமல்-லிங்குசாமிக்கிடையே ஏற்பட்ட நட்பு காரணமாகவே இந்த வாய்ப்பு அக்சராவுக்கு சென்றிருப்பதாகவும் சொல்கிறார்கள்


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions