லிங்குசாமி படத்தில் மீண்டும் பையா நாயகி தமன்னா!

Bookmark and Share

லிங்குசாமி படத்தில் மீண்டும் பையா நாயகி தமன்னா!

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா ஆகிய படங்கள் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான முக்கியமான ஹிட் படங்கள். அந்த வகையில், கார்த்தி-தமன்னா நடித்த பையாதான் அவரது கடைசி ஹிட் படமாக அமைந்தது.

அதன்பிறகு சூர்யா-சமந்தாவை வைத்து அவர் இயக்கிய அஞ்சான் அதிர்ச்சி தோல்வி படமாக அமைந்து விட்டதால் அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன் சில மாதங்களாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகிறார் லிங்குசாமி.

மேலும், அடுத்து ஏற்கனவே விஷாலைக் கொண்டு இயக்கிய சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் தொடங்குகிறார் லிங்குசாமி. மீண்டும் விஷாலே நடிக்கும் இந்த படத்திலும் சமந்தாவை நடிக்க வைக்கதான் அவர் முடிவு செய்திருந்தார்.

ஆனால், அஞ்சானில் தன்னை அளவுக்கதிகமாக தோலுரித்து விட்டதாக மனதளவில் வருந்திக்கொண்டிருந்த சமந்தா கால்சீட் இல்லை என்று சொல்லி நழுவிக்கொண்டார்.

விளைவு, இப்போது தனது பையா நாயகியான தமன்னாவையே சண்டக்கோழி-2 படத்திற்கு ஓகே செய்திருக்கிறார் லிங்குசாமி. தற்போது ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ராஜமவுலியின் பாகுபலி படங்களில் நடித்துள்ள தமன்னாவின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதால், தனது புதிய படத்திற்கு அவரும் ஒரு பலமாக இருப்பார் என்று நினைக்கிறாராம் லிங்குசாமி. 


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
சிம்பு படம் இயக்குவது குறித்து முதல்முறையாக பேசிய லிங்குசாமி!
லிங்குசாமியை ஏமாற்றிய சிம்பு? தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions