மீண்டும் பரபரப்பான லிங்குசாமி!

Bookmark and Share

மீண்டும் பரபரப்பான லிங்குசாமி!

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். இது அந்த துறையில் பணியாற்றும், ஹீரோ-ஹீரோயின் முதல் இயக்குநர்-தயாரிப்பாளர் வரை எல்லோருக்கும் பொருந்தும். ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, கடந்தாண்டு சூர்யாவை கொண்டு இயக்கிய படம் அஞ்சான் இப்படம் ரிலீஸாவதற்கு முன்பு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது. 

ஆனால் ரிலீஸான பின்பு, பெரிய தோல்வி படமாக அஞ்சான் அமைந்தது. அஞ்சான் தோல்வி லிங்குசாமியை லேசாக மனதளவில் பாதித்தது. இருந்தாலும், சிறிதும் மனம் தளரவில்லை லிங்குசாமி. தோல்வியை வெற்றி படிகளாக மாற்ற வேண்டும் என்று எண்ணி தனது அடுத்தப்பட வேலைகளில் பிஸியாக களமிறங்கிவிட்டார்.

தற்போது கமலை வைத்து தான் தயாரித்துள்ள உத்தம வில்லன் படத்தின் ஆடியோ வௌியீட்டு விழா மற்றும் ரிலீஸ்க்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார் லிங்குசாமி. கூடவே தான் அடுத்து இயக்கவுள்ள கார்த்தி மற்றும் விஷால் பட வேலைகளையும் அவ்வப்போது கவனித்து வருகிறார். ஏற்கனவே கார்த்தியை வைத்து பையா எனும் வெற்றி படத்தை கொடுத்த லிங்குசாமி, அடுத்தப்படியாக கார்த்தியை வைத்து, எண்ணி ஏழு நாள் என்ற படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான ஹீரோயின், இதர நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் மார்ச் மாதம் இப்படத்தை துவங்க இருக்கிறார் லிங்குசாமி.

கார்த்தி படத்தை முடித்த கையோடு ஏற்கனவே அறிவித்தபடி விஷால் உடன் சண்டக்கோழி-2 படத்தை ஆரம்பிக்க இருக்கிறார். அஞ்சான் தோல்வியாக அமைந்தாலும் அதை மறந்து, ஒருபக்கம் தயாரிப்பு பணி, மற்றொரு பக்கம் இயக்குநர் பணி என படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் லிங்குசாமி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions