கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் அமெரிக்க உரிமை விற்பனை

Bookmark and Share

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் அமெரிக்க உரிமை விற்பனை

லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் வட அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு வெளியீட்டு உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரைம் மீடியா மற்றும் ராஜ்கமல் ஃப்ரைம் டைம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகின்றன. படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

கமல் ஹாஸன் இரு வேடங்களில் நடிக்க, அவருடன் கே பாலச்சந்தர், கே விஸ்வநாத், பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது.

வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து அமெரிக்க மற்றும் கனடா உரிமையை மேற்கண்ட நிறுவனங்கள் பெற்றுள்ளன. உத்தம வில்லன் வெளியாகும் அதே தேதியில் விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தமும், உதயநிதி - நயன்தாரா நடித்த நண்பேன்டா படங்களும் வெளியாகவிருக்கின்றன.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions