லிங்குசாமியின் சண்டைக்கோழி 2 உறுதியானது

Bookmark and Share

லிங்குசாமியின் சண்டைக்கோழி 2 உறுதியானது

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சண்டைக்கோழி. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் இந்த ஆண்டு தொடங்குவதாக இருந்தது.

இதை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, முதலில் அல்லு அர்ஜுன் படத்தை எடுக்க அவர் ஆர்வமாகிவிட்டார். இதனால் கோபமடைந்த விஷால்
‘சண்டைக்கோழி 2’ படத்தையே டிராப் செய்தார்.

இந்நிலையில் இவர்களுக்கு இடையில் இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகவும் இதைதொடர்ந்து இம்மாத இறுதியில் சண்டைக்கோழி 2 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions