மீண்டும் தள்ளிப் போன லயன் பட வெளியீடு

Bookmark and Share

மீண்டும் தள்ளிப் போன லயன் பட வெளியீடு

தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்  நடிகர் பாலகிருஷ்ணாவின் லயன் பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவான இப்படம் உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிவடையாததால் மே 8 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

அவ்வாறே தணிக்கைக்குச் சென்று யு/ஏ சான்றிதழும் பெற்றுவிட்டதால் லயன் படம் இவ்வாரம் திரைக்கு வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. லயன் படம் மே 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தாமதத்திற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஹிந்தி நடிகை ராதிகா ஆப்டே மற்றும் தமிழ் நடிகை த்ரிஷா ஆகியோர் இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்துள்ளனர். மே 14 ஆம் தேதியாவது லயன் படம் திரைக்கு வருமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions