ரசிகர்களுடன் லயன் படம் பார்த்த பாலகிருஷ்ணா

Bookmark and Share

ரசிகர்களுடன் லயன் படம் பார்த்த பாலகிருஷ்ணா

டோலிவுட்டில் லெஜண்ட் எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான லயன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரைக்கு வந்தது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியான இப்படம் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது. நடிகர் பாலகிருஷ்ணா ஐதராபாத்தில் உள்ள பிரமரம்பிகா திரையரங்கில் ரசிகர்களுடன் இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

இயக்குநர் சத்ய தேவ்  இயக்கிய  இப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி  நடிகை ராதிகா ஆப்தே நாயகிகளாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் ருத்ரபதி ரமணா ராவ்  தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions