லயன் படம் தாமத்திற்கான காரணம்!

Bookmark and Share

லயன் படம் தாமத்திற்கான காரணம்!

தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் லயன் படம் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வருவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தார் அறிவித்திருந்தனர்.

ஆனால் இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிவடையாததால்  இப்படத்தின் வெளியீடு தேதி மே 8க்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது லயன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டாலும் இப்படம் மே 8 தேதி வெளியிடவே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தெலுங்கு திரையில் பிரபல பின்னணி இசை வல்லுநர் மதுசூதன ரெட்டியின் தீடீர் மரணமே லயன் பட வெளியிட்டின் தாமதத்திற்கு  காரணமாக என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி  நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாலகிருஷ்ணா சி.பி.ஐ யாக நடித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions