149 நிமிடங்கள் மட்டுமே ஓடும் லயன்

Bookmark and Share

149 நிமிடங்கள் மட்டுமே ஓடும் லயன்

நந்தமூரி பாலகிரிஷ்ணாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் லயன் படத்தின் நீளம் சற்று அதிகமாகவே இருக்கின்றது என்று ஏற்கனவே குறிப்படப்பட்டு இருந்தது.

இன்றைய கால கட்டத்தில் உணவே பாஸ்ட் புட் கலாச்சாரத்தில் இருப்பதால், அதிக நேரம் ஓடக்கூடிய திரைப்படங்களை மக்கள் அவ்வளவாக ரசிப்பது கிடையாது.

இந்நிலையில் பாலைய்யாவின் லயன் படத்தை சுமார் 149 நிமிடங்கள் அளவிற்கு எடிட் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த படம் சென்சாருக்கு செல்கிறது.

149 நிமிடங்கள் ஓடக்கூடிய படங்களை தான் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே இது ஒரு சரியான நடவடிக்கையாக கருதப்படுகின்றது. இந்த படம் மார்ச் மாதத்திலேயே வெளிவரவேண்டியது.

ஆனால் சில காரணங்களுக்காக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. தற்போது இந்த படம் வரும் மே 8ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆகிறது என்று தெரிகிறது. அறிமுக இயக்குனர் சத்யதேவ் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் லயன் பாலைய்யாவுக்கு அழகு நடிகைகளான திரிஷாவும், ராதிகா ஆப்தேவும் ஜோடியாகும். பிரபல இசை அமைப்பாளர் மணி ஷர்மா இசை அமைக்கிறார். எஸ் எல் வி நிறுவனம் சார்பாக பிரபல தயாரிப்பாளர் ருத்ரபதி ரமண ராவ் தயாரிக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions