லயனோடு மோதும் படங்கள்

Bookmark and Share

லயனோடு மோதும் படங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்படும்  நந்தமூரி பாலகிரிஷ்ணாவின் லயன் படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். மேலும் தற்போது சம்மர் சீசன் வேறு. அதனால் லயன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த சம்மரில் லயன் ரிலீஸ் ஆகும் வேளையில் வேறு மூன்று படங்களும் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது லயன் படத்திற்கு போட்டியாக என்று ஒரு போதும் சொல்லிவிட முடியாது.

எனினும் ஒரே நேரத்தில் நான்கு படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. வரும் மே 1ம் தேதி லயன், வேர் இஸ் வித்யா பாலன்? , தாகுடுமூத தண்டாகொர்  மற்றும் தோன்காட்ட  ஆகிய  நான்கு  படங்களும் ரிலீசாக உள்ளது.

வேர் இஸ் வித்யா பாலன்? படம் முழுநீள காமெடி படமாகும். தாகுடுமூத தண்டாகொர் படமானது தமிழ்  படமான  சைவத்தின் தெலுங்கு டப்பிங் படமாகும். ஆக லயனோடு மோதும் படங்களும் சளைத்தது அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்நிலையில் லயன் படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் இன்னும் நிறைவு பெறாத  நிலையில் வரும் மே 1ம் தேதி லயன் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions