ட்விட்டரில் நடிகர் கேஆர்கேவை திட்டிய நடிகை லிசா

Bookmark and Share

ட்விட்டரில் நடிகர் கேஆர்கேவை திட்டிய நடிகை லிசா

பாலிவுட் நடிகை லிசா ஹேடன் தன்னை பற்றி கீழ்த்தரமாக ட்வீட் போட்ட நடிகர் கமால் ஆர் கானை விளாசித் தள்ளியுள்ளார். பாலிவுட் நடிகை லிசா ஹேடன் கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர். குயீன் படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

அவர் கடந்த 1ம் தேதி ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இப்படி டங்க் அடிக்க பயிற்சி எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கூடைப்பந்து விளையாட்டில் வரும் கூடையை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்.

இதை பார்த்த பாலிவுட் நடிகர் கேஆர்கே அதாங்க கமால் ஆர் கான் ட்விட்டரில் லிசாவை வம்புக்கு இழுத்துள்ளார்.நான் வேண்டுமானால் கீழே உட்கார்ந்து உங்களை பார்க்கவா என்று கமால் ஆர் கான் ட்விட்டரில் லிசாவிடம் கேட்டுள்ளார்.

இதை விட கீழ்த்தரமாக இருக்க முடியாது கமால் ஆர் கான். இன்னும் உங்களுக்கு நாற்காலி வேண்டுமா என்று லிசா பதிலுக்கு கேட்டுள்ளார்.நீங்கள் தான் லிசா எங்கோ தொங்கிக் கொண்டு உங்களை பார்க்குமாறு மக்களிடம் கூறினீர்கள்.

அதனால் தான் கீழே அமர்ந்து பார்க்கவா என்று கேட்டேன் என கேஆர்கே ட்வீட் செய்துள்ளார்.ட்விட்டரில் உங்களுக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள், எனக்கு எத்தனை ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் நான் எவ்வளவு பெரிய ஸ்டார் என்பது தெரியும்.

அதனால் மரியாதையுடன் பேசுங்கள் என்று ட்வீட் செய்துள்ளார் கே.ஆர்.கே.யாரையாவது நக்கல் அடித்து, வம்புக்கு இழுத்து ட்வீட் செய்வது இந்த கமால் ஆர். கானுக்கு ஒன்றும் புதிததல்ல.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
திருமணத்திற்கு லிப் டூ லிப், கர்ப்பத்திற்கு பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions