களரி கற்கும் நடிகை லிஸி

Bookmark and Share

களரி கற்கும் நடிகை லிஸி

முன்னாள் நடிகை லிஸியும், அவரது கணவர் இயக்குனர் ப்ரியதர்ஷனும் திருமண பந்தத்தில் கசப்புற்று தற்போது பிரிந்து வாழ்கின்றனர். ப்ரியதர்ஷன் எப்போதும் போல் காப்பி படங்களாக இயக்குகிறார். லிஸி...? 

லிஸி தனது ஃபேஸ்புக்கில் களரி பயிலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த களரி தற்காப்புக்கலை பயிற்சிப் பட்டறையில் லிஸி கலந்து கொண்டார்.

கடந்த இரு வாரங்களாக களரி பயின்று வருவதாகவும், யோகாவைப் போன்று களரியும் மனதை ஒருமுகப்படுத்தி விழிப்புணர்வை அதிகப்படுத்துவதாகவும், தினசரி யோகா செய்யும் ஒரு நபர் என்ற வகையில் களரியும் யோகாவைப் போன்றதே என்று தன்னால் உறுதியளிக்க முடியும் எனவும், அனைவரும் களரியில் சிறிதளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும், களரி கலையை அழியவிடக் கூடாது என்றும் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். 

களரி படித்த கையோடு வெள்ளித் திரைக்கும் வந்துவிடுங்கள். ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்.


Post your comment





Related News
லிசி - பிரியதர்ஷனுக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது
மாவோயிஸ்ட்டாக மாறுகிறார் லிசி (பிரியதர்ஷன்)..!
பிரியதர்ஷன், லிசி இடையே சொத்து பிரச்சினை: ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் லிஸி!
நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!
மீண்டும் இணைந்து வாழ முடிவு: லிஸி..!
தந்தைக்கு பண உதவி செய்யவேண்டும் :நடிகைக்கு கலெக்டர் உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions