மாவோயிஸ்ட்டாக மாறுகிறார் லிசி (பிரியதர்ஷன்)..!

Bookmark and Share

மாவோயிஸ்ட்டாக மாறுகிறார் லிசி (பிரியதர்ஷன்)..!

48 வயதாகிறது பிரபல மலையாள சீனியர் நடிகையான லிசிக்கு. விக்ரம் படத்தில் கமலின் ஜோடிகளில் ஒருவராக நடித்தவர் தான் இவர்.. லிசியும் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமண செய்துகொண்டபின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டு கணவரின் தயாரிப்பு, இயக்கம் சார்ந்த பணிகள் மற்றும் குடும்பத்தை கவனித்து வந்தார் லிசி. ஆனாலும் யார் கண்பட்டதோ தெரியவில்லை, கருத்து வேறுபாடு ஏற்படவே இப்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் மீண்டும் நடிக்க முடிவுசெய்திருக்கிறார் லிசி. நிச்சயம் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது தான். அதனால் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வேடங்களில் நடிக்க முடிவு செய்தபோதுதான் அவரிடம் கதைசொல்ல வந்தார் இயக்குனர் திலகராஜ்.. அவர் சொன்ன இ சபதம் என்கிற கதையில் லிசிக்கு அவர் தயார் செய்திருந்தது ஒரு மாவோயிஸ்ட் வேடம்.. அதை கேட்டதுமே லிசி டக்கென ஒத்துக்கொண்டாராம். இனி அடுத்தடுத்த படங்களில் லிசியை தொடர்ந்து பார்க்கலாம் என்றே தெரிகிறது.


Post your comment





Related News
லிசி - பிரியதர்ஷனுக்கு குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது
'சில சமயங்களில்' படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!
களரி கற்கும் நடிகை லிஸி
பிரியதர்ஷன், லிசி இடையே சொத்து பிரச்சினை: ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் லிஸி!
நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கும் பியா
கேரள அரசு பதவியில் இருந்து பிரியதர்ஷன் ராஜினாமா
மீண்டும் இணைந்து வாழ முடிவு: லிஸி..!
இயக்குனர் பிரியதர்ஷனின் திரயரங்கில் ஏ.டி.எம் சென்டரை துவங்கி வைத்த நடிகர் சிவகுமார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions