கணவர் சித்ரவதை செய்வதாக புகார்: நடிகை ரதிக்கு லிசி ஆதரவு

Bookmark and Share

கணவர் சித்ரவதை செய்வதாக புகார்: நடிகை ரதிக்கு லிசி ஆதரவு

தமிழ், இந்தி படங்களில் நடித்த பிரபல முன்னாள் கதாநாயகி ரதி கணவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரதிக்கு நடிகை லிசி ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இவரும் கணவரை பிரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிசி கூறியதாவது:–

ரதி நிலைமையை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. நான் அவருக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்.

விவாகரத்துகள் பொதுவாக கஷ்டமான விஷயம். என்னை பொறுத்தவரை மிகவும் கஷ்டமானது. 15 முதல் 20 வருடங்கள் வரை கணவருடன் குடும்பம் நடத்திய பெண்கள் விவாகரத்து கேட்பதை விட திருமணமாகி 2 அல்லது 4 வருடங்களில் விவகாரத்து கேட்பது ரொம்ப வேதனையானது.

கணவர் சித்ரவதைகளை நிறைய பெண்கள் பொறுத்துக் கொள்வதற்கு காரணம் குழந்தைகள். அந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் விவாகரத்து முடிவை எடுக்கிறார்கள்.

வயதான பிறகு விவாகரத்துக்கு ஏன் போகிறார்கள். கணவருடன் சகித்துக் கொண்டு வாழலாமே என்று கூறுகிறார்கள். வயதான பெண்கள் நிலைமையை அவர்கள் புரிந்து கொள்ளாதவர்கள்.

இவ்வாறு லிசி கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions