சிரிப்பு போலீசான லிவிங்ஸ்டன்!

Bookmark and Share

சிரிப்பு போலீசான லிவிங்ஸ்டன்!

விஜயகாந்த் நடித்த பூந்தோட்டக்காவல்காரன் படத்தில் வில்லனாக மிரட்டியவர் லிவிங்ஸ்டன். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்த அவர், சொல்லாமலே படத்தில் ஹீரோவாக நடித்தார்.

சசி இயக்கிய அந்த படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக கெளசல்யா நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்குப்பிறகு சுந்தர புருசன் படத்தில் நாயகனாக நடித்த லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக அப்போதைய முன்னணி நடிகைகளான ரம்பா-தேவயானி ஆகியோர் நடித்திருந்தனர். பின்னர் அவர் மீண்டும் கேரக்டர் நடிகராகி விட்டார். இப்போதுவரை அப்படியே தொடர்ந்து வருகிறார்.

ஆனால், வெறும் கேரக்டர் என்பதைவிட சில படங்களில் அவரது காமெடி ஒர்க்அவுட் ஆனதால் அடுத்து காமெடி ட்ராக்கில் செல்லத் தொடங்கியிருக்கிறார் லிவிங்ஸ்டன்.

அந்த வகையில், பேய் இருக்கா இல்லையா -என்ற படத்தில் சிரிப்பு போலீசாக நடிக்கிறார் அவர். தற்போது அவருக்கு பெரிய அளவில் தொப்பை இருப்பதால் அவருக்கு அந்த சிரிப்பு போலீஸ் கெட்டப் கனகச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, காமெடியும் நன்றாக வெளிப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions