நரசிம்மா பட நஷ்ட வழக்கு: தயாரிப்பாளர் சுதீஷ் கோர்ட்டில் ஆஜர்

Bookmark and Share

நரசிம்மா பட நஷ்ட வழக்கு: தயாரிப்பாளர் சுதீஷ் கோர்ட்டில் ஆஜர்

2001ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படம் வெளிவந்தது. இந்தப் படத்தின் நெல்லை பகுதி விநியோக உரிமையை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் வாங்கி இருந்தார்.

படத்தை விநியோகித்த வகையில் தனக்கு 26 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனை தயாரிப்பாளர் சுதீஷ் தரவேண்டும் என்றும் மாரியம்மாள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சுதீஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதி மன்றமும் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. என்றாலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.

வழக்கில் ஆஜராக நீதிமன்றம் பலமுறை சுதீசுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் சுதீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுதீஷ் நேற்று ஸ்ரீவில்லி புத்தூர் கோர்ட்டில் ஆஜரானர். வழக்கை அடுத்த மாதம் 11ந் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்தது.


Post your comment





Related News
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்
சில்க் ஸ்மிதாவுக்கும், ரம்பாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்று தந்துள்ளது – "உள்குத்து" நடிகர் தினேஷ்
பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions