அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்

Bookmark and Share

அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றினார்.

ஆர்.ஜே.பாலாஜி ஏன் இப்படி செய்கிறார்? உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி நேற்று அறிவித்திருந்தார். 

அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். 

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விது அய்யன்னா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். அரசியலை மையப்படுத்தி காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது.

இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  `நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக. LKG' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் வீட்டில் முற்றிய சண்டை! முரண்பட்டவர்கள் இவர்கள் தான்
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions