மோகன்லாலின் 'லோகம்' பர்ஸ்ட் லுக் வெளியானது..!

Bookmark and Share

மோகன்லாலின் 'லோகம்' பர்ஸ்ட் லுக் வெளியானது..!

மலையாளத்தில் உள்ள பிரபல சேனல் ஒன்றில் மாதம் ஒருமுறையாவது ஒளிபரப்பாகிவிடும் படம் மோகன்லால் நடித்த 'ராக் அன்ட் ரோல்'.. பிளாக் பஸ்டர் படமான இதனை இயக்கியவர் ரஞ்சித்.

தற்போது மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ரஞ்சித், பல வருடங்களுக்கு முன் இயக்குனராக அறிமுகமானது மோகன்லால் படத்தில் தான்.. கடந்த வருடம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த, கேரள அரசாங்கத்தால் சிறந்த விழிப்புணர்வு திரைப்படம் என பாராட்டப்பட்ட 'ஸ்பிரிட்' படத்தை இயக்கியதும் இவர்தான்.

தற்போது மீண்டும் மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் அஜ்மல்.. இந்தப்படத்தில் இவருக்கு ஸ்டைலிஷான கதாபாத்திரமாம்.

அதுமட்டுமல்ல, இவர் ஏற்கனவே மோகன்லாலுக்கு தம்பியாக 'மாடம்பி' என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார். கதாநாயகியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. தங்க கடத்தலின் பின்னணியில் உருவாகிவரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions