பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – லூத்புதின் பாஷா !

Bookmark and Share

பறந்து செல்லவா திரைப்படம் 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த ஓர் அனுபவத்தை தரும் – லூத்புதின் பாஷா !

“பறந்து செல்ல வா “ திரைப்படத்தில் நடித்து உள்ளேன். முதல் முறையாக இதில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். கதாநாயகனாக நடிப்பதால் மட்டுமல்ல இப்படம் எனக்கு  ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.  

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் சிங்கப்பூரில் படமாக்க பட்டுள்ளது.  

இதுவரை சிங்கப்பூரை அனைவரும் படமாக்கியது போல் படமாக்காமல் முற்றிலும் புதிய விதத்தில் உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.

சைவம் திரைப்படத்தை முடித்துவிட்டு நான் கதைகளை கேட்டுகொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் தனபால் பறந்து செல்ல வா கதையை கொடுத்து இந்த கதையில் நீங்க நடிக்க வேண்டும் என்றார். இப்படத்தில் சம்பத் என்ற முக்கிய கதாபாத்திரம் உள்ளது அதில் தாங்கள்  தான் நடிக்க வேண்டும் என்றார்.

கதையை முழுவதும் படித்தேன் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது , எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மார்டன் பெண்ணாக நடித்து இருக்கின்றார். அவர் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நட்போடு இருந்தார். எனக்கு சில இடங்களில் தடுமாறும் போது சொல்லி கொடுத்தார்.

இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அதை நான் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் “ நீ ஒரு நடிகன் , கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தால் போதும் என அறிவுரை கூறினார்.

படம் முடித்து விட்டு என்னுடைய அம்மாவையும் , தாணு சாரையும்  அழைத்து படத்தை திரையிட்டோம். அவர் திரைப்படத்தை பார்த்துமுடித்துவிட்டு இடைவெளியில் ஏதாவது கூறுவார் என எதிர் பார்த்தேன். அவர் முழு படத்தையும் பார்த்து முடித்து விட்டு என்னை அழைத்து மிகவும் பாராட்டினார் .

மொத்தம் 50 நாட்களில் எங்கள் படம் படமாக்கபட்டு இருப்பதை கேள்விப்பட்டு எங்களை பாராட்டினார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பிரபாகர் மற்றும்  சந்தோஷ். இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக சிறந்த முறையில் வந்துள்ளது.

மேலும் ரஜினி சார் படத்துல வருகின்ற பாடலான “ நம்ம ஊர் சிங்காரி “ பாடல் அப்படியே படமாக்கபட்டுள்ளது.மேலும் நடனம் வகுப்புக்கு நான் சென்றது கிடையாது .இப்படத்தில் இரவு நேரங்களில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

படத்தை அனைவரும் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.மிக சிறிய குழு இனைந்து மிக சிறந்த முறையில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளது. தயாரிப்பாளர் அருமை சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார் என்றார் லூத்புதின் பாஷா.

 


Post your comment





Related News
டிஜிட்டல் பாட்ஷாவுக்கு புதிதாய் பின்னணி இசையமைத்த தேவா!
முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !!
முட்டை வாங்க கடன் கேட்ட பிபாஷா பாசு
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1½ கோடி வாங்கிய பிபாசா பாசு!
21-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா!
டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ்
நியா படத்திலிருந்து பிபாஷாவும் விலகல்
தமிழ் ரீமேக்கிற்காக, பிபாஷா பட வாய்ப்பை உதறிய ராணா
மீண்டும் இணையும் பிபாஷா மற்றும் வஷூ
கரணுடன் \'அந்த\' காட்சிகளில் நடிக்க கூச்சமாக இல்லை: பிபாஷா \'பிசாசு\'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions