திருட்டு டிவிடியை ஒழிக்க லைக்கா நிறுவனத்தின் முதல்முயற்சி!

Bookmark and Share

திருட்டு டிவிடியை ஒழிக்க லைக்கா நிறுவனத்தின் முதல்முயற்சி!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கி தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் திருட்டு டிவிடியை ஒழிக்க இந்த நிறுவனம் தற்போது முதல் முயற்சி எடுத்துள்ளது. அதாவது “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்திற்கான வர்த்தக ரீதியான டிரேட்மார்க் ஒப்புதல் எண்ணை பதிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து (Copy Rights) பெற்றுள்ளது.

இதன் மூலமாக சட்டவிரோதமாக படத்தை இணையத்தில் தரவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்தாலோ, திருட்டு டிவிடிக்களை விற்பனை செய்தாலோ சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியும். மேலும் திருட்டு டிவிடிகளை தயாரித்து விற்பனை செய்யும் கும்பலை எளிதில் தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்பதால் அவற்றைக் கணிசமாகக் கட்டுப்படுத்த இம்முயற்சி கை கொடுக்கும் என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

 


Post your comment





Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
அவதூறு பேசியவர்களுக்கு லைகா நிறுவனம் வைத்த செக்- ரூ 10 கோடியை எடுத்து வை
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!
ரஜினியை சந்தித்த லைக்கா நிறுவன தயாரிப்பாளர்
லைக்கா நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions