இந்திய சினிமாவில் கலக்கும் லைக்கா புரோடக்சன்!

Bookmark and Share

இந்திய சினிமாவில் கலக்கும் லைக்கா புரோடக்சன்!

லைகா நிறுவனம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ஜெகன் இயக்கும் “ இக்கா “ என்ற படத்தையும் தயாரிக்கிறது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ராம் சரண் தேஜ் உடன் இணைந்து கத்தி படத்தின் ரீமேக்கையும் தயாரிக்க உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படமான கத்தியை தொடர்ந்து இந்திய துணை கண்டத்தின் இரு பெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2 பாய்ண்ட் O ( 2.ஒ) என்கிற படத்தை தயாரிக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி எமிஜாக்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பெரும் பட்ஜெட் படங்களையே லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லி வருவதை பொய்பிக்கும் வகையில் கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க சாம் ஆண்டன் இயக்கத்தில் சிறிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது.

இத்தருணத்தில் தமிழக மக்களின் பெரும் துயரத்தில் லைக்கா நிறுவனமும் பங்கெடுக்கும் வகையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் திரு. சண்முகம் அவர்களை லைகா நிறுவனத் தலைவர் திரு. சுபாஷ் கரன் அவர்கள் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

 


Post your comment





Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
அவதூறு பேசியவர்களுக்கு லைகா நிறுவனம் வைத்த செக்- ரூ 10 கோடியை எடுத்து வை
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!
ரஜினியை சந்தித்த லைக்கா நிறுவன தயாரிப்பாளர்
லைக்கா நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions