லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!

Bookmark and Share

லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!

லைக்கா  ஞானம்  அறக்கட்டளையின்  இணை நிறுவுனர்  திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கு ஜி.ஒ.டி  எனப்படும்  மாண்புமிக்க   உலக அதிகாரிகள்  அமைப்பு (Global Officials of Dignity )  அதியுயர்  விருது வழங்கி மதிப்பளித்துள்ளது.

நியூயோர்க்கிலுள்ள  ஐக்கிய நாடுகள்  சபைத் தலைமையக  வளாகத்தில் நேற்று (17. 08 2016) இளவரசி  மரியா அமொர்  தலைமையில் வி. சீ எச் We Care for Humanity (WCH) அமைப்பின்  3வது  வருடாந்த  மாநாடு  இடம்பெற்றபோது இந்த  சிறப்பு  மதிப்பளிப்பு  இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க  தேசிய  கீதத்துடன் ஆரம்பமான  முதல்நாள்  மாநாட்டில் பல பேராளர்கள் முக்கியமான தலைப்புகளில்  தமது கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.  உலகின் கல்வி , சுகாதாரம்,   அமைதி, மனிதஉரிமை, பசுமைச் சூழல் ஆகிய தலைப்புகளில் பேராளர்களின் உரைகள் வழங்கப்பட்டன.

மாநாட்டின்  முதற்பகுதி  நிறைவடைந்த பின்னர் சிறப்பு  நிகழ்வாக  விருது வழங்கல்  இடம்பெற்றது. லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் அதன் இணை நிறுவனரான திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் சேர்த்தே  இந்த மதிப்பளிப்பு வழங்கபட்டுள்ளது.

திருமதி  ஞானாம்பிகை  அல்லிராஜாவுக்கு வி. சீ எச் அமைப்பின்  சார்பில்  இந்த ஆண்டின்  சிறந்த பெண்மணி என்ற  விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை மாட்சிமை மிக்க  சவூதி  இளவரசர்  பைசல் அல் சவுட்  மற்றும் ஐ.நாவுக்கான பெனினின்  நிரந்தரத் தூதர் பிரான்சிஸ் சின்சூ  ஆகியோர் வழங்கினர்.

இதேபோல  2016 ஆம் ஆண்டுக்கான  உலகின்  பெரிய  மனிதாபிமான அமைப்புக்கான  சிறப்பு விருது  லைக்கா ஞானம்  அறக்கட்டளையின் நிறுவனரும்  லைக்கா குழுமத்தின்  தலைவருமான   சுபாஸ்கரன் அல்லிராஜா  அவர்களுக்கும் அவரது  தயாரும் அறக்கட்டளையின்   இணை நிறுவுனருமான  ஞானாம்பிகை  அல்லிராஜாவுக்கும்  இணையாக வழங்கப்பட்டது.

இந்த விருது  மதிப்புக்குரிய  ரோசலியா  ஆர்த்திகா, மதிப்புக்குரிய  கைல் ராஜ் ரெஜ்மி,  மதிப்புக்குரிய  ஸ்ரிபன்  ஹலொன்சோ    முஸ்ஜோகா  ஆகியோரால் வழங்கப்பட்டது.

இதனைவிட  நியூயோர்க்  செனட்டர் டேவிட் கார்லூசி அவர்களின் சான்றிதழும் வழங்கப்பட்டது.  லைக்காஞானம் அறக்கட்டளையின் அயராத உழைப்பு அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளை முன்னிட்டு இந்தப் பாராட்டு வழங்கப்படுவதாக  செனட்டர் டேவிட் கார்லூசி குறிப்பிட்டுள்ளார்லைக்கா குழுமத்தின் தலைவர்  சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் அவரது அன்னை  ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோர் 2010 இல் தோற்றுவித்த லைக்கா ஞானம் அறக்கட்டளையானது  இலங்கை  உட்பட  பல  நாடுகளில் தனது மனிதாபிமான  சேவையை  மேற்கொண்டு வருகின்றது.

வறிய  குடும்பங்களின்  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல  தொண்டுப் பணிகளில் ஞானம் அறக்கட்டளை மேற்கொண்டு வரும்   சேவையைப் பாராட்டியே  இந்த விருதும்  மதிப்பளிப்பும்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
அவதூறு பேசியவர்களுக்கு லைகா நிறுவனம் வைத்த செக்- ரூ 10 கோடியை எடுத்து வை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions