வாலியை பின்பற்றும் பாடலாசிரியர் பிரியன்!

Bookmark and Share

வாலியை பின்பற்றும் பாடலாசிரியர் பிரியன்!

விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் மக்காஏல மக்கா ஏல -என்ற ஹிட் பாடலை எழுதிய ப்ரியன், அதற்கடுத்து அதே விஜய்ஆண்டனி இசையமைத்த நடித்த சலீம் படத்திலும் மஸ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடலை எழுதினார்.

இந்த இரண்டு குத்துப்பாடல்களுமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அவரிடத்தில் மெலோடியை விட குத்துப்பாடல்கள் எழுதுவதில்தான் நீங்கள் ஸ்பெசலிஸ்டா? என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை. எல்லாவிதமான சூழலுக்கும் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். 

கோலிசோடா படத்தில் நான் எழுதிய ஜனனம் ஜனனம் -என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இதேபோல் பல மெலோடி பாடல்களை பல படங்களில் எழுதியிருக்கிறேன். இப்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் பிச்சைக்காரன் படத்தில் சில அற்புதமான மெலோடி டியூனுக்கு பாடல் எழுதியிருக்கிறேன்.

மேலும், என்னைப்பொறுத்தவரை என்னை அதிகம் பாதித்த கவிஞரான வாலியைப் போன்று எல்லாவிதமான சூழலுக்கும் பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது எதிர்கால திரையிசைப்பாடல்களின் பயணம் வாலியை பின்பற்றியே இருக்கும் என்கிறார் பாடலாசிரியர் ப்ரியன்.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!
பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் \'இராஜராஜ சோழனின் போர்வாள்’
உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி.
பிரபல கவிஞர் வாலி மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.
(கவி) பேரரசு பட்டம் எங்களுக்கு தேவையில்லை கவிஞன் அறிவுமதியின் நெற்றியடி!
“நண்பர்கள் கவனத்திற்கு” படத்தின் ஆடியோ ரிலீஸில் - 'இளைய கவிப்பேரரசு' சினேகனின் அலறல் !
‘நீர்ப்பறவை’யில் வைரமுத்துவின் சர்ச்சைக்குரிய‌ பாடல் வரிகள் நீக்கம்!
கவிஞர் தாமரையின் கணவர் எங்கே? சர்ச்சையை கிளப்பும் மீடியா உலகம்!
சினிமா பாடலாசிரியர் விபத்தில் மரணம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions