சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!

Bookmark and Share

சிம்பு, அனிருத் பீப் பாடலுக்கு கவிஞர் தாமரை கண்டனம்!

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ஆபாச பாடலுக்கு பாடலாசிரியர் தாமரை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் கூறி இருப்பதாவது, “சிம்பு-அனிருத் பாடல் குறித்து என்னிடம் கருத்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நானும் அந்த பாடலை கேட்டு வைத்தேன்.

இதில் நான் கருத்து சொல்ல என்ன இருக்கிறது என்று தோன்றியது. இப்படி எழுதலாமா? பெண்களை இழிவுபடுத்தலாமா? சமூக சீரழிவு என்றெல்லாம் பேசுகிறார்கள், அடப்பாவிகளா, நானும் இதைத்தானே இருபது ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போதுதான் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல் பொங்குகிறார்களே. நான் சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டி இருக்கிறேன். நீண்ட நெடிய 18 ஆண்டுகள் ஆபாசமாக எழுத மாட்டேன். அருவருக்கத்தக்க வரிகள் தரமாட்டேன்.

சமூகத்தை கெடுக்கும் பாடல் எழுத மாட்டேன். பாடல்கள் மட்டுமல்ல. காட்சிகள், வசனங்கள், நடிகர்களின் உடல்மொழி எதிலும் ஆபாசம் கூடாது என்று வலியுறுத்தி வந்து இருக்கிறேன். இதற்காக எனக்கு தனிப்பட்ட முறையில் பல இழப்புகள். 

ஆனாலும் என் நிலைப்பாட்டில் சமரசம் இல்லை. நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதான் இப்போது கிடைத்து இருக்கிறது. நல்ல பாடல் வரவேண்டும் என்று இந்த சமூகம் விரும்பி இருந்தால் தாமரைபோல் ஒரு பத்து பேராவது வந்து இருக்க வேண்டாமா.

ஒருவர் கூட இல்லையே அப்புறமென்ன ஐயோ திரைப்பட பாடல்கள் சமூகத்தை சீரழிக்கின்றன என்ற ஒப்பாரி. உண்மை என்னவெனில் தாமரைகள் இந்த சமூகத்துக்கு தேவை இல்லை. 

நல்லனவற்றை கொண்டாட தெரியாத பாதுகாத்து வைத்துக்கொள்ளாத சமூகத்துக்கு அல்லனதானே கிடைக்கும். சமூகத்தில் எல்லா துறையிலும் சீரழிவு.

சினிமா மட்டும் சீலத்தோடு இருக்க வேண்டுமா? சிம்புவும் அனிருத்தும் வேற்றுகிரகவாசிகளா? இந்த சமூகத்தில் இருந்துதானே அவர்களும் வந்தார்கள் அறம், விழுமியங்கள் அழிந்த சமூகத்துக்கு அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள்தான் கிடைக்கும்” இவ்வாறு தாமரை கூறி உள்ளார்.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
வாலியை பின்பற்றும் பாடலாசிரியர் பிரியன்!
பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் \'இராஜராஜ சோழனின் போர்வாள்’
உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி.
பிரபல கவிஞர் வாலி மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.
(கவி) பேரரசு பட்டம் எங்களுக்கு தேவையில்லை கவிஞன் அறிவுமதியின் நெற்றியடி!
“நண்பர்கள் கவனத்திற்கு” படத்தின் ஆடியோ ரிலீஸில் - 'இளைய கவிப்பேரரசு' சினேகனின் அலறல் !
‘நீர்ப்பறவை’யில் வைரமுத்துவின் சர்ச்சைக்குரிய‌ பாடல் வரிகள் நீக்கம்!
கவிஞர் தாமரையின் கணவர் எங்கே? சர்ச்சையை கிளப்பும் மீடியா உலகம்!
சினிமா பாடலாசிரியர் விபத்தில் மரணம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions