அவசர‌ சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி - அதிர்ச்சியில் திரையுலகம்.

Bookmark and Share

அவசர‌ சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி - அதிர்ச்சியில் திரையுலகம்.

'கண்ணதாசனுக்குப் பின்  இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அவசர‌ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி ஆறாத் துயரும் அடைந்துள்ளனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Post your comment

Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions