தனது பெயரை மாற்றிய இயக்குனர் எம்.ராஜா

Bookmark and Share

தனது பெயரை மாற்றிய இயக்குனர் எம்.ராஜா

கோலிவுட்டின் வெற்றிப்பட இயக்குனர்கள் வரிசையில் இயக்குனர் எம்.ராஜாவும் ஒருவர். இவர் இயக்கிய முதல் படமான ‘ஜெயம்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர் இயக்குனராக அறிமுகமானதோடு, தனது தம்பியான ஜெயம் ரவியைய நடிகராகவும் அறிமுகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து, இவர் இயக்கிய ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’, ‘உனக்கு எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ ஆகிய படங்களும் அவருக்கு வெற்றியை தேடித் தந்தன. எடிட்டர் மோகனின் மகனான இவர், ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

கோலிவுட்டில் இவரை இதுவரை எம்.ராஜா என்று அழைத்து வந்த நிலையில், தற்போது, தனது பெயருக்கு முன்னால் அவரது அப்பாவின் பெயரான மோகனை சேர்ந்து மோகன் ராஜா என்று மாற்றியுள்ளார். இனிவரும் படங்களில் இவரது பெயரை மோகன் ராஜா என்று குறிப்பிடும்படியும் கூறியுள்ளார்.

அதன்படி, இவரது இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தனி ஒருவன்’ படத்தில் இருந்து எம்.ராஜா, மோகன் ராஜா என்ற பெயருடன் வலம்வரப் போகிறார். இந்த பெயர் மாற்றம், அவருக்கு மேலும் மேலும் வெற்றியைத் தேடி தரவேண்டும் என சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions