அபாயகட்டத்தை தாண்டினார் மெல்லிசை மன்னர்

Bookmark and Share

அபாயகட்டத்தை தாண்டினார் மெல்லிசை மன்னர்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி உடல்நிலை மோசமாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் இருதய அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) செய்து கொண்டார். அன்று முதல் அவர் உடல் அளவில் மிகவும் தளர்ந்து விட்டார். தொடார்ந்து உடல் நலக்கோளாறு பிரச்னைகளும் ஏற்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான மூச்சு திணறல் காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பலனாக உடல் தேறி வந்த அவருக்கு நேற்று முன்தினம் உடல் நிலை மீண்டும் மோசமானது.

பல திரைப்பட முன்னணியினர் நேற்று மருத்துவமனை சென்று அவரது மகன் எம்.எஸ்.வி.கோபியிடம் நலம் விசாரித்துச் சென்றனர்.

நேற்று மாலை எம்.எஸ்.வியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. "அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்களை தவிர்க்கவும், தொற்று நோய் ஏற்படாமல் இருக்கவும் தான் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் பூரண நலன் பெற பிரார்த்தனை செய்யுமாறு அவரது அபிமானிகளை கேட்டுக் கொள்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்பலாம் என்ற டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்" என்று எம்.எஸ்.வியின் மகன் கோபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions