ஹீரோவாகும் பிரபல ஒளிப்பதிவாளர்!

Bookmark and Share

ஹீரோவாகும் பிரபல ஒளிப்பதிவாளர்!

மைனா, கும்கி, நிமிர்ந்து நில், மான் கராத்தே, காக்கி சட்டை உட்பட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் எம்.சுகுமார். இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஜீவனின் தம்பியான இவர், பணிபுரிந்த படங்களின் வெற்றிக்கு இவரது ஒளிப்பதிவு முக்கிய பங்காற்றி உள்ளது. மதுரை சம்பவம், சிவப்பு எனக்குப் பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கியவரும், பாடலாசிரியருமான யுரேகா தற்போது தொப்பி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு  எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தொப்பி படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் சுகுமாரிடம்தான் பேச்சு வார்த்தை நடத்தினாராம் யுரேகா. சில காரணங்களுக்காக எம்.சுகுமார் தொப்பி படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். யுரேகா அடுத்ததாக இயக்கவிருக்கும் மாடு என்ற படத்தில் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்தான் ஹீரோ. இந்தத் தகவலை தொப்பி இசைவெளியீட்டு விழாவில் யுரேகா தெரிவித்தார். அதே விழாவுக்கு வந்திருந்த சுகுமாரும் இதை ஆமோதித்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்தாலும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை நிறுத்த மாட்டேன் என்கிறார் சுகுமார். தற்போது குணசித்திர நடிகர்களாக விள்கிக்கொண்டிருக்கும் இளவரசு, அருள்தாஸ் ஆகியோர் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர்களாக இருந்தவர்கள்தான்.  நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடி வந்ததால் ஒளிப்பதிவை மறந்துவிட்டு முழுநேர நடிகர்களாகிவிட்டனர்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions