விஜய் டிவியை தொடரும் மா.கா.பா.ஆனந்த்!

Bookmark and Share

விஜய் டிவியை தொடரும் மா.கா.பா.ஆனந்த்!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்கி வந்தவர் மா.கா.பா.ஆனந்த். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபிறகு இவர்தான் முக்கியமான ஆண் தொகுப்பாளர் பட்டியலில் இருந்தார்.

ஆனால், ஒருகட்டத்தில் இவருக்கும் சிவகார்த்திகேயனைப் போன்று சினிமா ஆசை ஏற்பட, வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார்.

அந்த படம் பெரிதாக போகவில்லை. இருப்பினும், பஞ்சுமிட்டாய், அட்டி, தீபாவளி துப்பாக்கி, நவரச திலகம் என நான்கு படங்கள் அவருக்கு கிடைத்தன.

இருப்பினும், படங்கள் உடனுக்குடன் முடிந்து திரைக்கு வராமல் தாமதமாகிக்கொண்டு வருகின்றன. அதனால் சினிமாவில் முழுவீச்சில் இறங்கிய மா.கா.பா.ஆனந்த், இப்போது மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், என்னை வளர்த்தது விஜய் டிவிதான். அதனால் என்னதான் நான் சினிமாவில் பெரிய நடிகனானபோதும் விஜய் டிவியை மறக்க மாட்டேன். அதை என்றைக்குமே எனது தாய்வீடு போல நினைப்பேன்.

அதனால்தான் ஹீரோவாகி விட்டபோதும் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இப்போது மட்டுமின்றி, எதிர்காலத்தில் சினிமாவில் நான் பெரிய இடத்துக்கு வந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவேன் என்று கூறும் மா.கா.பா.ஆனந்த், என்னைப்பொறுத்தவரை விஜய் டிவியின் தொகுப்பாளர் என்று சொல்லிக்கொள்வதை பெருமையாகவே கருதுகிறேன் என்கிறார்.


Post your comment

Related News
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions