நவரச திலகமான மா.கா.பா.ஆனந்த்

Bookmark and Share

நவரச திலகமான மா.கா.பா.ஆனந்த்

சின்னத்திரையில் தொகுப்பாளராக நுழைந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக உயர்ந்தவர்களில் மா.கா.பா.ஆனந்தும் ஒருவர். இவர் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த இவருக்கு தற்போது தனி ஹீரோ அந்தஸ்து உள்ள படங்களும் வந்தவண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் தற்போது ‘பஞ்சுமிட்டாய்’, ‘அட்டி’, ‘தீபாவளி’ துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ‘நவரச திலகம்’ என்ற பெயரில் உருவாகும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘மேகா’ படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும், கருணாசரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் வித்தியாசமான வேடம் ஒன்றில் இசையமைப்பாளர் சித்தார்த் விபினும் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ராஜ்கபூர், பூபதி பாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றிய காம்ரான் இயக்குகிறார். 90 சதவீதம் காமெடி கலந்து குடும்ப சித்திரமாக எடுத்து வருகிறார்கள்.

பொள்ளாச்சியில் 60 சதவீதம் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அடுத்தக்கட்டமாக திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

இப்படத்தை ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சுதர்சன வெம்புட்டி மற்றம் கே.ஜெயச்சந்திரன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இசையை சித்தார்த் விபின் கவனிக்கிறார்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சமந்தா நடிக்க தடையா?
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions