தேவையில்லாமல் போஸ்ட் போட்டு மலையாளிகளிடம் வாங்கிக் கட்டிய "மாங்கா"

Bookmark and Share

தேவையில்லாமல் போஸ்ட் போட்டு மலையாளிகளிடம் வாங்கிக் கட்டிய

பிரேம்ஜி அமரனுக்கு வாயில் வாஸ்து சரியில்லை போலும். தேவையில்லாமல் ஒரு போஸ்ட்டைப் போடப் போய் மலையாளிகளிடம் செமையாக வாரிக் கட்டிக் கொண்டுள்ளார். மாங்கா என்று எந்த நேரத்தில் படத்தில் நடித்தாரோ, அவர் செய்யும் சில செயல்கள் மாங்காத்தனமாகவே இருக்கின்றன என்பது துரதிர்ஷ்டவசமானது.

இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரேம்ஜி அமரன். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்ட ஒரு போஸ்ட் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது கேரளாவில்.மது வாடை அதிகம் வீசும் மாநிலங்களில் முக்கியமானது கேரளா.

அப்படிப்பட்ட மாநிலத்தில் மது பார்களுக்கு அந்த மாநில அரசு தடை விதித்து மூடி விட்டது. இதை வைத்து பேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார் பிரேம்ஜி. அதுதான் சிக்கலாகி விட்டது.கேரளாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு போக்குவரத்து சைன் போர்டுதான் சிக்கலுக்குக் காரணம். அந்த சைன் போர்டில் கோட்டயம் என்ற ஊருக்கு 3 விதமான வழிகளில் போகலாம் என்பது போல உள்ளது.

அந்தப் படத்தைப் போட்டு அதில், you think may be it was a good thing they banned alcohol in the state?" என்று கருத்து போட்டிருந்தார் பிரேம்ஜி அமரன் ( தற்போது அதை நீக்கி விட்டார்).

இதுதான் பிரச்சினைக்கு காரணமாகி விட்டது.உண்மையில் அது போட்டோஷாப் செய்யப்பட்ட சைன் போர்டு அது என்று பின்னர்தான் தெரிய வந்துள்ளது. இதனால், கேரளாவில் உள்ளவர்கள் எல்லாம் குடிகாரர்களா, கேரள மக்களை கேவலப்படுத்துவது போல எப்படி பிரேம்ஜி கருத்து போடலாம் என்று மலையாளிகள் பிரேம்ஜியின் பேஸ்புக் பக்கத்தில் குவிந்து குதறி எடு்த்து விட்டனர். இந்னும் கூட ஓயாமல் வந்து ஒப்பாரி வைத்து வருகின்றனர்.

பலர் ஆங்கிலத்தில் பட்டி என்று ஆரம்பித்து மாங்கா என்று திட்டி முடிக்கின்றனர். பலர் மலையாளத்திலேயே வந்து திட்டி விட்டுப் போகின்றனர். பலர் முல்லைப் பெரியாறு பிரச்சினையயும் சேர்த்து வைத்து அசிங்கமாக எழுதி வருகின்றனர்.

இன்னும் சிலரோ, நீ நடிப்பதை நாங்கள் மது போதையில் இருந்தாலும் கூட ரசிக்க மாட்டோம் என்று எழுதியிருப்பதுதான் ரொம்பக் கொடுமை என்ன கொடுமை பிரேம்ஜி இது.!

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions