மாரி படத்தில் தனுஷ் யார்?

Bookmark and Share

மாரி படத்தில் தனுஷ் யார்?

காதலில் சொதப்புவது எப்படி? என்ற வெற்றிப்படத்தையும், வாயை மூடி பேசவும் என்ற தோல்விப்படத்தையும் இயக்கியவர் பாலாஜிமோகன். வாயை மூடி பேசவும் படத்திற்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் படம் - மாரி.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் காஜல் அகர்வால். மாரி படத்தில் முறுக்கு மீசை, குறுந்தாடி என வித்தியாசமான கெட்அப்பில் நடிக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷ் டைலராக நடிக்கிறார் என ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன.  அவர் டைலராக நடிக்கவில்லையாம்... லோக்கல் தாதாவாகத்தான் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மாரி படத்தில் உண்மையில் தனுஷுக்கு என்ன கேரக்டர்? டைலராக தான் உண்டு தன் தையல் கடை உண்டு இருக்கும் மாரி, பெரிய தாதாவாக மாறுவதுதான் மாரி படத்தின் கதையாம்.

ஆக..டைலராக நடிக்கிறார் என்ற தகவலும் உண்மைதான் தாதாவாக நடிக்கிறார் என்ற தகவலும் உண்மைதான். சமீபத்தில் சென்னை திருவல்லிக்கேணி ஏரியாவில் மிகப்பெரிய மார்க்கெட் செட் ஒன்று  போடப்பட்டு மாரி படப்பிடிப்பு நடந்தது.

இந்த செட் தவிர, மிகப்பெரிய சேரி செட் ஒன்றை அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions