தூத்துக்குடியை அதகளப்படுத்திய மாரி

Bookmark and Share

தூத்துக்குடியை அதகளப்படுத்திய மாரி

அனேகன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து வரும் படம் மாரி. ’காதலில் சொதப்புவது எப்படி’ பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில், தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் படத்திற்கான ஓபனிங் பாடல் கடந்த ஒருவார காலமாக தூத்துக்குடியில் படமாக்கப்பட்டு வருகிறது. அனேகன் படத்தில் இடம்பெற்ற டங்கமாரி பாடல் போன்று இதிலும் ஒரு மாரி பாடல் உருவாகி வருகிறது.

கொஞ்சம் நல்ல மாரி...

கொஞ்சம் வேற மாரி...

தேய்த்தால் தங்க மாரி...

மொறச்சா சிங்க மாரி...

என்று ஒரு அதிரடியான பாடலை படமாக்கி வருகிறார்கள். தூத்துக்குடி துறைமுகம் அருகே படமாக்கப்பட்டு வரும் இப்பாடலில் தனுஷூடன், இசையமைப்பாளர் அனிருத்தும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்.

மாரி படம் ஷூட்டிங் இங்கு நடைபெறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானபேர் கூடிவிட்டனர். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் கூடி விட போலீசாரின் துணையோடு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். தனுஷின் மாரியால், தூத்துக்குடி துறைமுகமே அதகளமாகிவிட்டது.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions