தனுஷின் ஜூலை மாத சென்ட்டிமெண்ட்!

Bookmark and Share

தனுஷின் ஜூலை மாத சென்ட்டிமெண்ட்!

ராதிகாவின் தயாரிப்பில் தனுஷ் நடித்த மாரி படம் ரெடியாகி சில மாதங்களாகிவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்யாமலே இருந்தனர்.

அதனால் தயாரிப்பாளர்கள் மீது தனுஷ் தரப்பிலிருந்து சற்றே அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பவமும் நடந்தது. மாரி படத்தை ஏன் ரிலீஸ் செய்யாமல் இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பின்னர் விளக்கமளிக்கப்பட்டதாம்.

அதாவது மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் இன்னும் விற்கவில்லை என்றும், படம் ரிலீஸ் ஆன பிறகு சேனல்கள் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்க ஆர்வம் காட்டாது என்றும் அப்படியே வாங்கினாலும் குறைந்த விலைக்கே வாங்குவார்கள் என்றும், எனவேதான் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனை முடிந்த பிறகு மாரி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த பதில் தனுஷ் சமாதானம் அடையவில்லையாம்.

கடந்த வரும் இதே ஜூலை மாதம் 18 ஆம் தேதி வேலையில்லா பட்டதாரி படம் ரிலீஸ் ஆனது. சூப்பர்ஹிட்டானது. அதேபோல் இந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி மாரி படம் வெளி வந்தே ஆக வேண்டும்.

அதற்கு சாட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் இருப்பது தடையாக இருந்தால் சொல்லுங்கள் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன தனுஷ், வாக்கு கொடுத்தபடியே மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிவிட்டாராம். தனுஷ் சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிய பிறகே மாரி படத்தின் வெளியீட்டு வேலைகள் சுறுசுறுப்படைந்து, இந்த வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions