மே 25, மாரி இசை வெளியீடு

Bookmark and Share

மே 25, மாரி இசை வெளியீடு

அனிருத் - தனுஷ் இருவரு இணைந்த அடுத்த அதிரடியான இசை வெளியீடாக மாரி படத்தின் இசை வரும் 25ம் தேதி வெளியாக உள்ளது.

காதலில் சொதப்புவது எப்படி படத்திற்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது படமான வாயை மூடிப் பேசவும் படத்தில் பலமாக சொதப்பிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் மாரி.

தனுஷ் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடித்துள்ளார். தனுஷ் இந்தப் படத்தில் ரவுடியாக நடிக்கிறாராம். ஏற்கெனவே, புதுப்பேட்டை படத்தில் ரவுடியாக நடித்தவர்தான் தனுஷ்.

அனேகன் படத்தில் இடம் பெற்ற டங்கா மாரி பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என தெரிந்தோ என்னவோ இந்தப் படத்திற்கும் மாரி என்றே பெயர் வைத்து விட்டார் தனுஷ்.

இந்தப் படத்திலும் டங்கா மாரியின் தொடர்ச்சி போலவே மீண்டும் மாரி இடம் பெற்றுள்ளது போலிருக்கிறது. தனுஷ் போட்ட டிவீட்டிலேயே அது புரிகிறது.

மாரி... கொஞ்சம் நல்ல மாறி... ரொம்ப வேற மாறி மாரி... தேச்சா தங்கம் மாறி...மொறச்சா சிங்கம் மாறி.. எனத் தொடங்கும் பாடல் படத்தில் இருக்கும் போலிருக்கிறது. அதைக் குறிப்பிட்டு தனுஷ் இந்தப் படத்தின் இசை 25ம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.

எப்படியும் இந்தப் பாட்டை அனிருத் தான் பாடியிருப்பார். முந்தைய படங்களைப் போல இந்தப் படத்திலும் அனிருத் - தனுஷ் கூட்டணி பாடல்களில் ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions