முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய மாரி குழுவினர்...!

Bookmark and Share

முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய மாரி குழுவினர்...!

தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள மாரி படம் நேற்று வெளியானது. வேறு எந்தப் படமும் போட்டியில் இல்லாத சூழ்நிலையில் நேற்று இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்த ஒரு படத்திற்கு இந்த அளவிற்கு ஓபனிங் இருந்தது ஆச்சரியம்தான் என்கிறார்கள். இந்த ஓபனிங்கே படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது போலும். நேற்று இரவே, தனுஷ், அவரது மனைவிய ஐஸ்வர்யா, இயக்குனர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்களும் அவர்களுடைய நண்பர்களும் படத்தின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாட்களைக் கடந்து ஓடினால்தான் வெற்றி என்று விழா நடத்தி ஷீல்டு வழங்கிக் கொண்டாடுவார்கள். சமீப காலமாக படம் வெளிவந்த இரண்டு நாட்களிலேயே  சக்சஸ் மீட்&  நடத்தி வெற்றி என்று அறிவித்தார்கள்.

ஆனால், இப்போதோ படம் வெளிவந்த அன்றே சக்சஸ் கொண்டாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இனி, போகப் போக முதல் காட்சிக் கொண்டாட்டம், முதல் சீன் கொண்டாட்டம் என கொண்டாட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சீனியர் நட்சத்திரங்களின் வீடுகளுக்கெல்லாம் போனால் அவர்களது வரவேற்பறைகள் 25வது வாரம் வெள்ளி விழா, 100வது நாள் விழா, குறைந்த பட்சம் 50வது நாள் விழா என பல விதமான ஷீல்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

இப்போதைய நடிகர்கள் வீட்டில் அப்படி எதையும் பார்க்க முடியாது. இனி, 100 நாட்களுக்குப் பதிலாக முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என நாளுக்கு நாள் விழா கொண்டாட வேண்டி வந்து விடுமோ என்ற கவலைதான் வருகிறது.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
இது மாரி செல்வராஜின் முதல் படம் அல்ல, முதல் கோபம்! சிஷ்யனுக்கு இயக்குநர் ராமின் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions